தமிழ்த்தாயின் காலில் விழுந்து வணங்கிய பொலிஸ்மா அதிபர்

வயோதிபப் பெண்ணின் கருத்தைக் கேட்டு கண்கலங்கிய வன்னிப் பிரதிப் பெலிஸ்மா அதிபர் அந்தப் பெண்ணின் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.
பிரதிப் பொலிஸ்மா அதிபரை மகன் என்று விழித்து அந்தப் பெண்ணும் அழுததால் நிகழ்வு சிறிது நேரம் சோகமயமானது.

வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சேவையைப் பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த நிககழ்வில் கலந்து கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேரந்த வயோதிபத் தாயொருவர் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்போது அவர் மக்களுக்கு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபரால் எனது பிள்ளைகளின் நலனுக்காக வீடு ஒன்று அமைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.
அவரை எனது மகனுக்குச்சமனாகவே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்துள்ளது. இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை எனக்குச் செய்து தந்துள்ளார் என்று தெரிவித்து கண்ணீர் மல்கினார்.
நிகழ்வில் குறித்த விடையத்தை அவதானித்துக் கொண்ருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னக்கோன் எழுந்து அந்தத் தாயை அரவணைத்து,கண்கலங்கினார்.
தாயின் காலில் வீழ்ந்து வணங்கினார். இந்தச் சம்பவம் கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்தவர்களை மனதுருகச் செய்தது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த வயோதிப தாயே அவர். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து வன்னிப்பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிஸாரின் பங்களிப்புடன் அவருக்கான நிரந்தரவீடு அண்மையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.