முத­ல­மைச்­ச­ரால் முடி­யா­விட்­டால் இர­வு­ப­க­லாக செய்து காட்­டு­கி­றேன்

வீதி விபத்­துத் தொடர்­பில், முத­ல­மைச்­ச­ரும், அதி­கா­ரி­க­ளும் அடி­மட்­டத்­துக்கு இறங்கி அர்ப்­ப­ணிப்­போடு சேவை செய்ய முயற்சி செய்­யுங்­கள். இல்­லை­யேல் இன்­னும் எத்­த­னையோ எமது உற­வு­களை இழக்­க­வேண்­டி­வ­ரும்.

முடி­யா­ விட்­டால் அமைச்சுப் பொறுப்பைத் தர­வேண்­டாம், தயவு செய்து ஒரு அனு­ம­தி­யைத் தாருங்­கள் இர­வு­ப­க­லாக நின்று வேலை செய்து தரு­கி­றேன்.

இவ்­வாறு கூறி­யுள்­ளார், நீதி­மன்­றால் வடக்கு மாகாண அமைச்­சர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்ள பா.டெனீஸ்­வ­ரன்.அவர் அனுப்­பிய செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
வடக்கு மாகா­ணத்தை வீதி விபத்­துக்­கள் அற்ற மாகா­ண­மாக மாற்­ற­வேண்­டும்.

எமது போக்­கு­வ­ரத்­துச் சேவையை ஏனைய மாகா­ணங்­கள் திரும்­பிப் பார்க்க வேண்­டும், அத­னைப் பார்த்து ஏனை­ய­வர்­கள் பின்­பற்ற வேண்­டும் என்­பது எனது இலட்­சி­யங்­க­ளில் ஒன்று.

இதற்­காக இர­வு­ப­க­லாக பாடு­பட்டு நிய­திச்­சட்­டம் உரு­வாக்கி அதன் ஊடாக போக்­கு­வ­ரத்து அதி­கார சபையை உரு­வாக்கி இருந்­தேன். பிழை செய்­வோ­ருக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கு­வ­தற்கு அந்­தச் சட்­டத்­தில் இட­மி­ருக்­கின்­றது.

பல்­வேறு வேலைத்­திட்­டங்­கள் செய்து வைத்­தி­ருந்­தேன். அவை­ய­னைத்­தும் தற்­போது முத­ல­மைச்­ச­ரின் கைக­ளில் உள்­ளன. அனைத்­தும் வெறு­மனே கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன. எம்­மில் சிலர் தானும் செய்ய மாட்­டார்­கள் செய்­ப­வர்­க­ளை­யும் செய்ய விட­மாட்­டார்­கள்.

இது எமது இனத்­தின் சாபக்­கேடு. வீதி விபத்­தால் இன்று எமது மாகா­ணத்­தில் ஒவ்­வொரு நாளும் ஏதோ ஒரு மூலை­யில் ஒரு உயிரை இழந்து கொண்டு இருக்­கின்­றோம். இதைப் பார்த்­துக்­கொண்டு இப்­ப­டியே இருக்­கப் போகி­றோமா? சார­தி­க­ளின் கவ­னக்­கு­றைவு என்று கார­ணம் கூறப்­போ­கின்­றோமா? தங்­கள் பிள்­ளை­ க­ளை­யும் உற­வு­க­ளை­யும் இழந்து பரி­த­விக்­கும் குடும்­பங்­க­ ளின் வேத­னையை உங்­க­ளால் உண­ர­மு­டி­ய­வில்­லையா?

2015 ஆம் ஆண்டு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உயி­ரி­ழந்த 5 வயது சுவஸ்­தி­கன் என்ற மாண­வ­னின் சாவு இன்­னும் என்­ம­ன­தில் ஆறாத வலி­யாகப் பதிந்­துள்­ளது. தயவு செய்து சிந்­தித்துச் செயற்­ப­டுங்­கள் – என்­றுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like