விடுதியில் தங்கியோரிடம் ரூ. 3 லட்சம் பணம் திருட்டு

யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் உள்ள விடுதி ஒன்­றில் தங்­கி­யி­ருந்­த­போது பண­மும், நகை­க­ளும் திரு­டப்­பட்­டன என்று யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமைய விடுதி உரி­மை­யா­ளர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம், நக­ரில் விக்­ரோ­ரியா வீதி­யில் உள்ள விடுதி ஒன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. பெரும்­பான்­மை­யி­னக் குடும்­பத்­தைச் சேர்ந்த குடும்­பம் ஒன்று சுற்­று­ லா­வாக யாழ்ப்­பா­ணம் வந்­துள்­ள­னர். அவர்­கள் அந்த விடு­தி­யில் தங்­கி­யுள்­ள­னர்.

இரவு நகை­கள் களவு போய்­வி­டும் கழற்றி வைத்­துக் கொள்­ளுங்­கள் என்று விடுதி உரி­மை­யா­ளர் கூறி­னார். அவ்­வாறு நகை­க­ளைக் கழற்றி வைத்து விட்டு உறங்­கி­னோம். காலை­யில் நகை­கள் பணத்­தைக் காண­வில்லை என்று அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

3 லட்­சம் ரூபா பண­மும், 12 பவுண் நகை­யும் திருட்­டுப் போயுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பா­டும் செய்­துள்­ள­னர்.

இந்த விடு­தி­யில் முன்­ன­ரும் பல தட­வை­கள் திருட்டு நடந்­துள்­ளது என்று கூறப்­ப­டு­கின்­றது. விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் சந்­கேத்­தின் அடிப்­ப­டை­யில் விடுதி உரி­மை­யா­ள­ரைக் கைது செய்­த­னர். அவரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அதே­வேளை, அங்­குள்ள அறை ஒன்­றில் பல மருத்து வகை­கள் காணப்­பட்­டன என்­றும், அவை தொடர்­பா­க­வும் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.