இலங்கை கடற்பரப்பில் பாரிய ஆபத்து!

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலங்கையின் பல்வேறு கடற்பகுதிகளில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.

தற்போது மன்னார் கடலில் கரை ஒதுங்கிய இந்த குப்பையினால் பாரியளவில் சூழல் மாசடைந்துள்ளது.இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதுடன், கடல் பகுதி அசுத்தம் நிறைந்த குப்பை மேடாக காட்சியளிக்கிறது.இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் வீசப்பட்ட பெருந்தொகை மருத்துவ கழிவுப்பொருட்கள் புத்தளம் பகுதியில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது