வெளிநாடு ஒன்றில் 2 பிள்ளைகளுக்கு இலங்கை பெண் செய்த காரியம்! காரணமான கணவர்

சிசிலியா தீவின் பெலர்மோ நகரத்தில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவுடன் விஷத்தை கலந்து உண்ணக் கொடுத்து விட்டு, குறித்த உணவை தானும் உண்டு தற்​கொலைக்கு முயற்சித்ததால், அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி இரவு குறித்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையடுத்து, ஒன்று மற்றும் 3 வயது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த பெண் இரவு உணவில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு வழங்கி விட்டு, தானும் உண்டுள்ளார். இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணின் தாய் தனது மகளும், குழந்தைகளும் இருக்கும் நிலைக் கண்டு, அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதன் மூலம் 3 உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்கொலை முயற்சி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் வழங்கி கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் பெலர்மோ சிசிகோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,குழந்தைகள் இருவரும், மற்றுமொரு வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒரு வயது குழந்தையின் நிலை மோசமாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like