புதுக்குடியிருப்பில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

உயர்தரப் பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் ஒருவர், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை சந்தேக நபர் உட்பட சிலர் கெப் வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பளை பிரதேசத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.

பளையில் வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நேற்று முன்தினம் விடுவித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் கந்தையா விஜயரூபன், அவரது தாய் உட்பட மூன்று பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like