தேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்! கிழக்கிலங்கையில் நடந்த அதிசயம்

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூஜையில் பிள்ளையாருக்கு கும்பம் வைக்கவென முடிசூட்டிய தேங்காயில் பிள்ளையாரின் கண்கள் தெரிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வாணி விழாவுக்காக வீரமுனை ஆலயகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் கும்பம் வைக்க தேங்காயை முடிசூட்டிய வேளையில் இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.

முடிசூட்டிய தேங்காயின் அருகருகாக பிள்ளையாரின் கண்கள் இருந்தன. உடனே குருக்கள் குங்கமத்திலகம் இட்டுக் காட்டினார்.

இதன் போது குருக்கள் தெரிவிக்கையில்,

சாதாரண தேங்காயில் மூன்று கண்கள் அமைந்திருக்கும். ஆனால் இத்தேங்காயில் காணப்படும் இரு கண்களும் அருகருகாக அமைந்துள்ளதோடு விநாயகரின் கண்கள் வடிவிலே அமையப்பெற்றிருப்பது அபூர்வமாகும் என்றார்.