நான் துரோகி இல்லை! அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன்? வியாழேந்திரன் சூளுரை

நான் துரோகி இல்லை, எனது கோரிக்கைகளில் 30 சதவீதம் கூட நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து உடனே வெளியேறுவேன் என்று கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கூட்டமைப்பில் இருந்த மன அழுத்தங்களும் எனது முடிவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டேன். இதில் 30 விகிதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிப்பேன் என்றும் அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் துரோகி இல்லை, எந்த ஆயுத பின்னணியில் இருந்தும் ஆட்சிக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணம் வாங்கி ஆட்சிக்கு வந்ததாக கூறும் விடயத்தை முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். ஒரு சதம் கூட கை நீட்டி நான் யாரிடமும் வாங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான இணைவுகள் மூலம் சிலவற்றையாவது பாதுகாக்கலாம் தானே என்றும் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.