கிளிநொச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! குளிரில் வாடும் மக்கள்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

காலை ஏழு மணியை கடந்தும் கிளிநொச்சியில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது.

அத்துடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதோடு அதிகாலையில் நிலவிய கடுமையான குளிர் நிலை தொடர்ந்து நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles