இலங்கையில் திருமண நிகழ்விற்கு சென்றவரின் குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான அதிர்ச்சி தகவல்

ஊறுகஸ்மங்ஹந்திய பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

குறித்த சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஹக்குறு சுமணசிறி (62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊறுகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like