வெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி

நியூசிலாந்தில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான ஹர்ஷன ரஜீவ் குமார என்ற இலங்கையருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கை இதற்கு முன்னர் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகியுள்ளார்.

அவருக்காக ஆஜராகிய சட்டத்த்தரணியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நியூசிலாந்தின் Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது தனது கட்சிக்காரர் வேண்டும் என்றே துஷ்பிரயோகம் செய்யவில்லை என சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதென்பது அவரின் பொதுவான குணம் அல்ல என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் அவர் இவ்வாறான காரியத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர் நேற்று முன்தினம் பணி நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அங்கு அவர் பதின்ம வயது பெண்ணுக்கு அருகில் அமர்ந்து அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் பல முறை தடுக்கும் இந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதன் காரணமாக அடுத்த நாள் அந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு, 17 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like