மாட்டிறைச்சி வாங்கி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை – இலிங்கநகர் பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையில் இன்று (24) காலை சோனகவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் வாங்கிய இறைச்சியிலே புழுக்கள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு குறித்த இளைஞர் கொண்டு வந்துள்ளார்.

இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் புழுக்கள் காணப்படும் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் போட்டு வைக்குமாறு கூறியுள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

அத்துடன் இறைச்சிக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது முல்லைத்தீவு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 70 கிலோ எடை கொண்ட மாட்டை இன்று காலை அறுத்ததாகவும், அதனை பொது சுகாதார பரிசோதகர் பார்த்ததாகவும் இறைச்சி கடை உரிமையாளர் தெரிவித்தார்.

எனினும் , பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொண்டு வினவியதில் , மாடு அறுக்கப்படும் போது அது நல்ல நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , பாதிக்கப்பட்ட நபருக்கு பழுதடைந்த பழைய இறைச்சி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like