இலங்கையர்களை வதைக்கும் வெயில்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் நாளைய தினமும்வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வடமேல் மாகாணத்துடன், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்திலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக்கூடும்.

எனவே அதிகளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.