வடக்கு – கிழக்கில் க.பொ. த சாதாரண தர பரீட்சையில் யாழ் பாடசாலை வரலாற்றுச் சாதனை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகளின அடப்படையில் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த பாடசாலையில் 50 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் A சித்திகள் கிட்டியுள்ளது. அத்தோடு 8 A சித்திகளை 49 மாணவிகள் பெற்றுள்ளனர். 7 A சித்திகளை 34 மாணவிகளும், 6 A சித்திகளை 35 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

வேம்படி மகளிர் கல்லூரியில் நூறு வீத மாணவர்கள் இத்தேர்வில் சித்தியடைந்து உயர் வகுப்புக்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 35 மாணவர்கள் 9 A சித்திகளையும், 42 மாணவர்கள் 8 A சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்த பாடசாலையிலும் தோற்றிய மாணவர்கள் அனைவரும் நூறு வீதம் உயர்வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. அதன் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 9413 மாணவர்கள் 9 A சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like