கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்! மக்கள் வெளியேற்றம்!!

வவுனியா போதனா வைத்தியசாலையில் தற்பொழுது கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா செய்தியாளர் கூறுகின்றார்.

இதனால் வைத்தியசாலைக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றபட்டு அங்கு தீவிர சோதனைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு..

வைத்தியசாலையில் தற்பொழுது பதற்றநிலை தணிந்துள்ளபோதும் வெளியிலிருந்து வைத்தியசாலைக்குள் செல்லும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

கொழும்பிலிருந்து கிடைத்த அவசர பணிப்பின் காரணமாகவே இந்த பதற்ற நிலை நிலவியதென்று பொலிஸார் தெரிவித்ததாக அவர் மேலும் கூறுகின்றார்.

மூன்றாம் இணைப்பு…

பாதுகாப்பு அமைச்சினால் இன்று மதியமளவில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சேதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸா தெரிவித்தனர்.

இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள் ஏதேனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்குள் பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.