பாதகர்களே கொஞ்சம் கூட மனிதமில்லையா?: இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் ஆராதனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்நத 5 பேர் அடங்குகின்றனர்.

கதிரான பஹல கதிரான பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி வந்த ரங்கன பெர்னாண்டோ, அவரது மனைவி தனாதரி குறுப்பு ஆராச்சி, இவர்களின் பிள்ளைகளான 6 வயதான பேபியோலா பெர்னாண்டோ, 4 வயதான மத்துமி லியோனா பெர்னாண்டோ, 11 மாத குழந்தையான சேத் மஸ்தி பெர்னாண்டோ ஆகியோரே தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

இவர்களுடன் ஆராதனையில் கலந்துக்கொண்ட வீட்டில் வேலை செய்து வந்த 55 வயதான பிலமினா பெரேரா என்ற பெண்ணும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like