தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முழு குடும்பத்தையே இழந்த தந்தை ஒருவர் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் சுசந்ததை கல்லறைக்கு அருகில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த தனது குடும்பத்திற்காக பதிவொன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த பதிவில், “சிறிய மகன், மகள், பெரிய மகள் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் அம்மா அருகில் உள்ளார். மனைவி நீங்களும் தனியாக இல்ல. உங்கள் அண்ணன் மற்றும் அண்ணனின் பிள்ளைகள் உங்களுடன் உள்ளனர். என்னையும் விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.

சுசந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக கல்லறையில் இந்த பதிவை எழுதி வைத்துள்ளார்.

கடந்த மாதம் கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 3 பிள்ளைகள் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

அவரிடம் பேசியவர்களிடம் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது மனைவி எனக்கு ஒரு சட்டை தைக்க கொடுத்திருந்தார். எனினும் சரியாக தைக்கப்படாமையினால் கடந்த வருடம் நத்தார் பண்டிகைக்கு அணிந்ததை அணிவதாக கூறினார். நான் இரவு வேலைக்கு செல்வதனால், தாமதமாக என்னை வீட்டிற்கு வருமாறும் அவர்கள் தேவலாயத்திற்கு செல்வதாகவும் கூறினார்.

நீர்கொழும்பு ராஜபக்ச மைதானத்தின் காவலாளியாக நான் சேவை செய்வதனால் நான் 21ஆம் திகதி காலை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்றேன். அங்கு எனது குடும்பத்தினர் இருந்தனர்.

நான் ஆலயத்திற்கு சென்ற போதும் உள்ளே செல்லவில்லை வெளியே முச்சக்கர வண்டிக்குள் இருந்தேன். இதன் போது என்றுமே கேட்காத சத்தம் ஒன்று கேட்டது. தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தார்கள். என்ன நடந்ததென அறியாமல் தேவாலயத்திற்குள் சென்று எனது குடும்பத்தினரை தேடினேன்.

அங்கு எனது 15 மற்றும் 9 வயதான மகள் மற்றும் 7 வயதான மகன் குண்டு தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர். எனினும் சம்பவத்தில் காயமடைந்த மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அவருக்கு நினைவு இருந்தது. எனினும் காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு இடமில்லை. பல வைத்தியசாலைகளுக்கு அழைத்து திரிந்து இறுதியாக 3.30 மணிக்கே கராப்பிட்டிய வைத்தியசாலையில் மனைவியை அனுமதிக்க முடிந்தது.

3 பிள்ளைகளையும் இழந்து விட்டேன் என மனைவியை அனுமதிக்கும் போது மனைவியிடம் கூறினேன். மனைவியை அனுமதித்துவிட்டு பிள்ளைகளின் சடலத்தை பார்க்க சென்றேன். 3 சடலங்களும் கல்லறைக்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த நாள் மனைவியை பார்க்க வைத்தியசாலை சென்றேன். அங்கு அவரும் உயிரிழந்து விட்டார் என கண்ணீருடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.