யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, நுகேகொட பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பணியாற்றும் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, நுகேகொட பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் டி.ஜி.ரி.டபுல்யூ. தல்டுவ, யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மன்னார் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் எச்.எஸ்.என்.பீரிஸ், எல்பிட்டிய பொலிஸ் பிராந்தியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் மனித வளப் பிரிவில் பணியாற்றும் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ்.பி.பி. வீரசிங்க, மன்னார் பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தின் கீழ் யாழ்ப்பாணம், கோப்பாய், வட்டுக்கோட்டை, மானிப்பாய், சுன்னாகம், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, சாவகச்சேரி, மற்றும் கொடிகாமம் ஆகிய 9 பொலிஸ் நிலையங்கள் அடங்குகின்றன.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க தனிப் பொலிஸ் பிரிவையும் போதைப்பொருள் கடத்தல்கள், விற்பனைகளைத் தடுக்க தனிப் பொலிஸ் பிரிவையும் அமைத்து அவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து சிறப்புறப் பணியாற்றியிருந்தார்.

மன்னார், தலைமன்னார், பேசாலை, சிலாவத்துறை, வங்காலை, முருங்கன், அடம்பன், மடு மற்றும் இலுப்பைக் கடவை ஆகிய பொலிஸ் நிலையங்கள் அடங்குகின்றன

Get real time updates directly on you device, subscribe now.

You might also like