கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிற்கு அவசர தந்தி! முக்கிய தகவல் என்ன தெரியுமா?

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தா விட்டால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி , கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அவசர தந்தி அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசபை தரமுயர்த்துவதாக கூறி அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது.

இந் நிலையில், அரசு நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கிழக்கிலிருந்து இளைஞர்கள் சிலர் இந்த தந்தி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவியதையடுத்து, இன்று ஏராளம் தந்திகள் கல்முனையிலிருந்து இரா.சம்பந்தனிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, இன்று கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களிற்கும் கிழக்கிலிருந்து தந்திகள் அனுப்பப்பட்டு வருகின்றதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like