ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி – கல்வி அமைச்சரிடமிருந்து….!

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக 3 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அதேபாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாடசாலைகளில் 1,5,மற்றும் 11 ஆகிய வகுப்புக்களை தவிர ஏனைய வகுப்புக்களுக்கு தங்களது பிள்ளைகளை இடைநடுவில் சேர்த்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இந்த விசேட தீர்மானம் உரியதாக அமையும் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு அவர்களின் பிள்ளை சேர்த்துக்கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.