வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சிகர செய்தி

இந்த மாத இறுதிக்குள் சுமார் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 2013 மற்றும் 2018 இற்கு இடையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் தலையீடுகள் இன்றி 12,000 பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த அவர் இதில் வெளிநாட்டு பட்டதாரிகளும் அடங்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like