ஈழத்து பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் வாழ் யாழ் இளைஞன்; பெற்றோர்களே எச்சரிக்கை தகவல்!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் யாழ் இளைஞன் ஒருவர் வவுனியாவை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன, அதில் இவ்வாறு ஏமாற்றப்பட்டு வாழும், பிரிந்து வாழும், தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல ஈழத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு இரண்டு காரணங்களும் முன்வைக்கப்பட்டு வந்தது, அதில் ஈழத்தில் உள்ள பெண்களின் பெற்றோர் தங்கள் சுய பெருமைக்காக, பிள்ளைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சொல்லும் போலி கௌரவத்திற்காகவும் பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெரும் செலவில் திருமணம் செய்து வைத்து அவர்களின் சுதந்திரத்தை, சந்தோசத்தை பறிக்கின்றனர்.

இதே வேளை வெளிநாட்டிலிருக்கும் இளைஞர்கள் சில அந்த நாட்டுக்குரிய கலாசாரத்திற்கு மாறி அங்கேயே பெண் தோழிகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், தாயகத்தில் பெற்றோரின் விருப்பங்களுக்கு, அவர்களின் சொல்லை மீறாமல் இருப்பதற்காக ஈழத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து ஈழத்திலேயே வருடக்கணக்கில் விட்டு விட்டு சாக்குப்போக்கு சொல்லிவருவதையும் அவதானிக்க முடிகிறது.

திருமணம் என்பது இரண்டு மனங்கள் புரிந்து இணைவது தவிர, போலி கௌரவத்திற்காக, யார்? எப்படியானவர் என்று கூட தெரியாமால் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க துடிக்கும் வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோர்களுக்கும் இவ்வாறான சம்பவங்கள் பாடமாக அமையட்டுமெனவும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.