தந்தையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மகன்! இறுதி அஞ்சலியில் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட தந்தை

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மகன் இரண்டு நாள் அவசர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்விற்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டார்.

பலாங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் நேற்று இறுதி நிகழ்வுகள் நடந்தன.

பலாங்கொடட, மஸ்ஸென்ன, உடுநுவர பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த வாரம், பெற்றோரிற்கிடையில் தகராறு இடம்பெற்றது.

தடியொன்றினால் தாயை கொட்டனால் தாக்க முற்பட்ட தந்தையை தடுப்பதற்கு மகன் முற்பட்டார். எனினும், கொட்டன் மகனின் தலையில் தாக்கியது.

இதனால் அழமான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் இரத்தினபுரி பொது வைத்தியசலையில் அனுமதிக்கபட்ட போதிலும் ஒருவாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர் பாடசாலை மாணவன் ஆவார்.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் சநதேகநபரன தந்தை குடிபோதையில் இருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மாணவனின் தந்தையான 42 வயதுடைய ஜயரத்ன என்பவர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் உயிரிழப்பின் பின்னர் குருவிட்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான தந்தை நேற்று பகல் சிறைச்சாலை பஸ்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மகனின் பூதவுடலை காண்பதற்கு அழைத்துவரப்பட்டார்.

மகனின் உடலை பார்த்து கைவிலக்கிடப்பட்டிருந்த கைகளினால் தனது கண்ணீரை துடைத்துக் கொண்ட சந்தேகநபரான தந்தை ‘என்னை மன்னித்துவிடு மகனே… நான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை…’ என கூறி கதறி அழுதார்.