நல்­லூர் மந்­தி­ரி­மனைக்கு வந்தது ஆபத்து! உரிமை கோரும் சிங்களவர்!

யாழ்ப்பாணத்தில் மன்னராட்சி நிலவிய காலத்தில் , கட்டப்பட்ட நல்­லூர் மந்­தி­ரி­மனை அமைந்­துள்ள காணி தனக்­குச் சொந்­த­மா­னது என தெரி­வித்து பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்­த­வர் உரிமை கோரு­வதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் டச்­சுக் கால ஆட்­சி­யில் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஓலைச் சுவ­டியை ஆவ­ண­மா­கக் கொண்டு, மந்திரிமனையை உரிமை கோரியுள்ளார்.

காணி உரித்­துத் திணைக்­க­ளத்­தின் யாழ்ப்­பாண மாவட்ட அலு­வ­ல­கத்­தில் குறித்த ஓலைச் சுவ­டியை காட்டி அவர் உரிமை கோரு­வதாக திணை­க்கள வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

பண்­டா­ர­க­ம­வைச் சேர்ந்­த­ குறித்­த­ந­பர், தனக்­குச் சொந்­த­மான காணி­யில் மந்­தி­ரி­மனை அமைந்­துள்­ளது என்­று­கூறி காணி அமைச்­சின் கடி­தத்­து­டன் காணி ஆவ­ண­மாக ஓலைச் சுவ­டியுடன் திணைக்­க­ளத்­துக்குச் சென்­றதோடு, உரி­மைக் கான கோரிக்­கைக் கடி­தத்­தையும் கொடுத்­துள்­ளார்.

இந்த நிலையில் ஓலைச் சுவடி ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஆவ­ணம் என்றும், பிரிட்­டன் ஆட்­சி­யின் பின்­னர் இலங்­கைச் சட்­டப் படி காணி உறு­தி­யையே காணி உரித்து ஆவ­ண­மாக ஏற்றுக் கொள்ள முடி­யும் எனவும் திணைகழத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் காணி தொடர்­பான கோரிக்­கையைக் குறித்த நபர் முன் வைத்­த­மை­யால் அதனை பிர­தேச செய­ல­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்தி அதற்­கான பதிலை வழங்­கு­வ­தா­கக் திணைகளம் கூறியுள்ளது.

இந்த நிலையில் காணி உரித்து நிர்­ண­யத் திணைக் க­ளம் ஊடா­கக் குறித்த விட­யம் பிர­தேச செய­ல­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதேவேளை நல்லூர் மந்­தி­ரி­மனை நல்­லூர்ப் பிர­தேச செய­லக எல்­லைக்­குள் அமைந்­துள்­ள நிலையில், தற்­போது மந்­தி­ரி­மனை உள்ள காணி சட்­ட­நா­தர் சிவன் கோவில் ஆலய தர்ம கர்த்தா சபை­யின் நம்­பிக்கை நிதி­யச் சொத்­தாக உள்­ளது.

மேலும் நல்லூர் மந்­திரி மனை இலங்கை அர­சின் தொல் பொ­ருள் மூலா­தாரச் சொத்­தாக உள்­ளதோடு, கடந்த 2007ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி அரச பாது­காக்­கும் மூலா­தா­ர­மாகத் தெரி­வித்து , ஆயி­ரத்து 486 ஆம் இலக்க அர­சி­தழ் வெளி­யி­டப்­பட்­டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.