தமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன்? விஞ்ஞானமே வியக்கும் அதிசயம்! இப்படி ஒரு ஆதாரம் இருக்கிறதா?

வெற்றிலை என்பது தமிழர் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருளாகும். வீட்டில் நடக்கும் சுப காரியமாய் இருந்தாலும் சரி, துக்க காரியமாய் இருந்தாலும் சரி வெற்றிலை தாம்பூலம் இன்றி நடக்காது.

வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

அதற்கு ஆதாரமாக இலங்கையை சேர்ந்த பழமையான வரலாற்று புத்தகமான மகாவஸ்மாவில் (உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றான பாலி மொழியில் எழுதப்பட்டதாகும்) அதனை பற்றிய குறிப்புகள் உள்ளது
வெற்றிலைகளை சின்ன கட்டுகளாக சுருட்டி, விருந்தாளிகளுக்கு தருவது வாடிக்கையான ஒன்றாகும். அதனை பாண்-சுபாரி என்று அழைப்பார்கள்.

வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது.

வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் – “சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு”. ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது.

பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது. இதனால் திருமண வீடுகள் முதல் மரண வீடு வரை வெற்றிலை வைத்திருக்கின்றார்கள். சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெற்றிலை போடும் பழக்கம் இப்படிதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

வெற்றிலையின் முழு பயன்பாடும் தெரிந்தால் நம்முடைய தினசரி உணவில் கட்டாயம் வெற்றிலையை சேர்த்திவிடுவோம். இன்று தொழிநுட்ப உதவிகளை கொண்டு தான் பல மருத்துகளை கண்டுப்பிடிக்கின்றனர். தமிழர்களின் சாதாரண செயலில் கூட பல அறிவியல் மறைந்திருக்கின்றது என்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சிதான். இனி

வெற்றிலை சாப்பிட வேண்டியதன் மகத்துவத்தை இங்கு பார்ப்போம்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

ஜீரண சக்தி
வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்க்கு எதிராக போராடும் குணங்கள் வெற்றிலையில் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தலாம்.

தலைவலி
வெற்றிலையில் வலி நீக்கும் குணமும், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் உள்ளதால், அவைகளை தலையில் வைத்துக் கொண்டால், எவ்வளவு தலை வலி வந்தாலும், அவை பறந்தோடிவிடும்.