தமிழர் குடியிருப்புக்களை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரி இழப்பீடு!

கேகாலை யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது நேற்று முந்தினம் தாக்குதல் நடத்தியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையி இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கபட்டவர்களுக்கும் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கும் இடையில் பொலிஸாரின் தலையீட்டுடன் சமரச பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து சேதமாக்கபட்ட பொருட்களை புதிதாக கொள்வனவு செய்து கொடுப்பதற்கு தாக்குதல் நடத்தியவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதோடு சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் சம்பந்தபட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பு பெப்ரல் அமைப்பு, மனித உரிமை அமைப்புக்கள் உடனுக்கு உடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும், தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற எந்த அரசியல்வாதிகளும் இது வரை அங்கு செல்லவில்லை, என்பதோடு தங்களின் இந்த நிமை குறித்து ஆராயவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.