யாழில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞன் உயிருடன்! வெளியான புதிய தகவல்

யாழ் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையாா் கோவில் பின்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட இளைஞன் உயிாிழந்ததாக வெளியான செய்தி போலியானது என யாழ் வைத்தியசாலை நிா்வாகம் தொிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி யாழ் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டு காயங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் 26 வயதுடைய அஜித் என்ற இளைஞனை வீசிவிட்டு சென்றுள்ளனா்.

சம்பவம் தொடா்பில் மக்கள் பொலிஸாருக்கு தொிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாா் இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

குறித்த இளைஞன் இறந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என யாழ் வைத்தியசாலை நிா்வாகம் தொிவித்துள்ளது.

மேலும் குறித்த இளைஞன் “கேமி” குழுவின் தலைவரின் சகோதன் என தொியவந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலையினால், மற்றைய குழுவினர் இளைஞனை தாக்கியிருக்கலாமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.