யாழில் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்! இந்து சமய வழிபாட்டில் மதுபானத்தில் அபிஷேகம்

யாழ். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் சீரடி சாய் பாபா கோவிலில் மதுபான போத்தல்களை படையலுக்கு வைத்து பக்தர்கள் சிலர் சர்ச்சை எற்படுத்தியுள்ளனர்.

இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கோவில் பொறுப்பாளர் மிக அசட்டையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது, கிறிஸ்தவ தேவாலயங்களில் வைன் கொடுப்பதை போல மது பானம் வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சாய்பாபா வாழும் காலத்தில் மது அருந்தியுள்ளதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அது மாத்திரம் அல்ல, இது எனது கோவில் நான் எனக்கு விரும்பியதை செய்வேன் என்று கூறியதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட நபர் தனது சொந்த பணத்தில் கோவில் கட்டினாலும் அங்கு நிகழும் தவறுகள் அந்த பிரதேசம் சம்பந்தபட்ட அனைவரையும் பாதிக்கும். இதனால் இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, உலகம் முழுதும் சீரடி சாய்பாபாக்கு பல கோவில்கள் இருக்க அங்கு குறிப்பிட்ட ஆகம முறைப்படி பூசைகள் நடைபெறுகிறது அப்படி இருக்க வெறும் தனி நபர் விருப்பு வெறுப்புக்களை இதில் புகுத்துவது சிறந்த விடயம் அல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.