கொரோனாவுக்காக திருமணத்தை ஒத்திவைத்த வைத்தியர் மரணம்… சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த வைத்தியர் ஒருவருக்கு அதே கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளது இருப்பது சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வுஹான் நகரில் வைத்தியசாலை ஒன்றில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த 29 வயதான வைத்தியர் பெங் யூன்ஹுவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸின் அமையமாக உள்ள வுஹான் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

நுரையீரல் சிறப்பு நிபுணரான இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகாரித்து வருவத்தால் அவர்களுக்கு வைத்திய பார்க்க வைத்தியர்கள் பற்றக்குறை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சீனா முழுவதிலும் இருந்த வைத்தியர்களுக்கும் சீனா அரசாங்கம் அழைப்பு விடுத்து இருந்தது. இந்நிலையில் வுஹான் வைத்தியசாலைக்கு வைத்தியம் பார்க்க ஒப்புகொண்ட பெங் யூன்ஹுவா சீனா புத்தாண்டு அன்று நடக்கவிருந்த திருமணத்தை மார்ச் மாதத்திருக்கு ஒத்திவைத்தார்.

ஜனவரி மாதம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் ஜனவரி 25 ஆம் திகதி அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

தொடர்ந்து அவருக்கு வைத்தியம் அளிக்கப்பட்டு வந்தாலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது நிலைமை மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை சீன ஊடகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து வைத்தியர் பெங் யூன்ஹுவா சமூக வலைதளங்களில் பலரும் ஹீரோ (hero) என குறிபிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடைசி வரை அவரது திருமண அழைப்பிதழ் யாருக்கும் அனுப்படாமல் அவரது அறையிலே இருந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவருடன் சேர்ந்து 8 இதுவரை சீன சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் வுஹான் வைத்தியசாலையின் இயக்குநரும், கொரோனா வைரஸை முதல் முதலில் கண்டறிந்த வைத்தியரும் குறித்த தொற்று நோயால் உயிரிழந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.