அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

வவுனியா செட்டிக்குளம், இலுப்பைக்குளம் பகுதியில்  (26.05.2018) சனிக்கிழமை அன்று  காலை இ.போ.ச பேருந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய நிலையில் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படமால் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துப் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியின் சீரற்ற பாதை காரணமாக வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதன் போது பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகளுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படாமல் தப்பியுள்ளனர்.

இவ் வீதியின் சீரற்ற தன்மையே இவ் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது, இந்நிலையில் தினசரி 100-க்கு மேற்பட்டவர்கள் இவ் வீதியூடாகவே வவுனியா நகரத்திற்கு சென்றுவருகின்றனர். மீண்டுமொரு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு முன் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like