முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

முள்ளியவளை – மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளையை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் முல்லைத்தீவு, மதவாளசிங்கன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது குளித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

அவர் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய இளைஞர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், பொதுமக்களும் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் நேற்று காலை மதவாளசிங்கன் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை 01ம் வட்டாரம் பொன்னகரை சேர்ந்த இந்திரன் தகீசன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலத்திரினியல் தொழில்நுட்பம் திறமை வாய்ந்த குறித்த இளைஞனை இழப்போம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like