இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்! வியப்பில் ஆழ்ந்த மக்கள்

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது..

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

அரசாங்க பணியில் உள்ள இந்திக்க மற்றும் தில்ருக்ஷி என்ற தம்பதிக்கே இந்த வித்தியாசமான திருமணம் நடைபெற்றுள்ளது.

முழுமையாக மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

மணமகனின் நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு ஸ்டண்ட்களை மேற்கொண்டு வீதியை அலங்கரித்திருந்தனர்.

அத்துடன் மணமகன் மற்றும் மணமகள் மோட்டார் சைக்கிள்களில் திருமணத்திற்காக அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நடத்தப்பட்ட வித்தியாசமான திருமணங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like