யாழ்.நவீன சந்தை கட்டடங்களின் இணைப்பு பாலத்துக்குள் அகப்பட்ட லொறி..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைத்து கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேம் பாலத்தில் கன்டைனர் பொக்ஸ் பொருத்திய பாரவூர்தி ஒன்று அகப்பட்டதால் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.இந்தச் சம்பவம் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண வர்த்தகர் ஒருவரின் பாரவூர்தியே இவ்வாறு மேம்பாலத்தில் அகப்பட்டுக்கொண்டது.
அங்கு கூடியிருந்தவர்கள் பாரவூர்தியின் சக்கரங்களின் காற்றை வெளியேற்றி பின்னால் தள்ளி அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசர சேவை (119) அறிவிக்கப்பட்டும் பொலிஸார் எவரும் வரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனால் நவீன சந்தை கட்டடத் தொகுதியின் இணைப்புப் பாலம் சேதமடைந்தது

Get real time updates directly on you device, subscribe now.

You might also like