ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல் : பலரின் கண்களில் கண்ணீர்!!

அண்மையில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி கதறும் காட்சி ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது.

கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் காதலன் உயிரிழந்த நிலையில், காதலி படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த காதலனின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன.

உயிரிழந்த காதலனின் சடலத்தை பார்வையிட்ட காதலி கதறி கண்ணீர் விடும் போது கூறிய வார்த்தைகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலனின் சடலத்தை இறுதியாக காண்பிப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காதலி அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

தனது காதலனை சவப்பெட்டியில் பார்த்த காதலி கண்ணீர் விட்டு கதறி அழுது கூறிய வார்த்தைகள் மனதை நெகிழச் செய்கின்றன.

“என்னை இவரோடு செல்ல விடுங்கள், அல்லது இப்பொழுதே திருமணம் செய்து வையுங்கள். விவாக பதிவாளரை உடனடியாக அழைத்து வாருங்கள். நான் எனது காதலரை திருமணம் செய்ய வேண்டும்” என அனைவரிடமும் கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் தனது காதலனுக்கு எழுதிய கடிதமும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

‘ உங்களை பார்த்து மூன்று தினங்கள் கடந்த விட்டது. எனது அம்மா உள்ளிட்ட அனைவரும் உங்களை காண விரும்புகின்றனர்’ என கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதமே இணையத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like