இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய அதிசய பலா மரம்!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.

ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த மரத்தின் கன்று நாட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 வருடங்களாக தங்கள் தோட்டத்தில் வளரும் இந்த அபூர்வ பலா மரத்தினால் இன்னமும் பலர் பயன் பெறுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு முறை இந்த மரத்தில் பலா காய்கள் காய்ந்து தொங்கும். இதனை வீதியில் செல்வோர் பறித்து செல்வதாக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழமையை விடவும் மிகவும் அதிகமான பலாப்பழங்கள் இந்த மரத்தில் காய்ப்பதே சிறப்பு அம்சமாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like