மின்மானியில் ஊசி செலுத்தி முறைகேடு செய்த வர்த்தகருக்கு- தண்டத்துடன் இழப்பீடு!!

மின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்மானியின் மூடியில் துவாரமிட்டு அதனுடாக சிறிய ஊசியை உட்செலுத்தி சுழலும் தட்டின் செயற்பாட்டை இயக்கத்தைத் தடை செய்ததாக குறித்த வர்த்தகர் மீது சாவகச்சேரி பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மின்மானியில் முறைகெடு செய்தமைக்காக 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், தண்டச் தொகை செலுத்தாவிடின் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் சட்ட விரோத செயற்பாட்டினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதத்தை சுன்னாகத்தில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்தில் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினை நீதிமன்றில் சமர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.