பெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்! மூவர் படுகாயம்

முள்ளியவளை பிரதான வீதியில் பெண்கள் குழு ஒன்று சற்றுமுன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை தண்ணீரூற்று சந்தைப்பகுதியில் ஆண்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளநிலையில் அது குழு மோதலாக மாற்றமடைந்து பிரதான வீதிக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற பெண்கள் குழு ஒன்று மோதலில் ஈடுபட்ட ஆண்களுக்கு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்தில் மூன்று ஆண்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like