இன்றைய ராசிபலன் 20-10-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக் கூடும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவியுடன் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர் செல்ல நேரிடும்போது கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாய்வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். மற்றவர்களுடன் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்: மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களின் சந்திப்பு சங்கடம் தருவதாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். பழைய கடன்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றி கரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்த இழுபறி நிலை மாறும். அதிகாரிகளின் ஆதரவில் காரிய அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்: இன்று எதிலும் அவசரம் வேண்டாம். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்கவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால், தேவையான பணம் கையிலிருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடம் ஏற்பட்டு நீங்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

Get real time updates directly on you device, subscribe now.