இதனால்தான் பிரிந்தார்களா? தாடி பாலாஜியும் நித்யாவும்

பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலே பிரச்சனை வந்துவிடும். ஆனால் இந்த 2வது சீசனில் ஏற்கெனவே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்று பிரிந்திருக்கும் பாலாஜி-நித்யா இடையே சண்டை ஏற்படுத்தாமல் பிக்பாஸ் விட்டுவிடுவாரா என்ன.

கொஞ்சம் கொஞ்சமாக நடந்துவந்த இவர்களது சண்டை வார இறுதிக்குள் முற்றிவிடும் போல் தெரிகிறது. இப்போது வந்த புதிய புரொமோவில் நித்யா பாலாஜியை தாக்கி பேச அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறார்.

புரொமோவை பார்த்த ரசிகர்கள் குடும்ப சண்டை நடக்கும் இடமா இது என்று கடுப்பாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.