சென்னையிலிருந்து இலங்கைக்கு புகையிரதம்

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து இலங்கைக்கு 6 டீசல் எலக்ட்ரீக் ரயில்களை (electric Train) இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது என ரயில்வேத் துறை இணையமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ரயிலும் தலா 13 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். அதன்படி 78 ரயில் பெட்டிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இலங்கை புகையிரத திணைக்களம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ரயில்கள், 6 பெட்டிகளை இதனை வாங்குவதற்கான உடன்படிக்கையினை செய்திருந்தது.

2017 ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை புகையிரத திணைக்களம் இந்திய கடன் பத்திரத்தின் கீழ் இந்தியா தயாரிப்பான ten train engines and six power sets வாங்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இலங்கை 10 என்ஜின்களுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், 58 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆறு power sets களுக்கு உடன்படிக்கை செய்யப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like