உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததால் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் பலி!

மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததில் இவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1990 இந்திய அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை எனவும் அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மதியமுதன், என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like