ராஜாஜி அரங்கில் பதற்றம்…2 பேர் உயிரிழப்பு; போலீஸ் தடியடியால் பரபரப்பு!

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி செண்பகம் என்ற மூதாட்டி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நெரிசலில் சிக்கி 8 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வந்தனர்.

விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறியதாக தடியடி நடத்தினர். இந்த கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like