தேசிப்பழத்திற்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிளை இழந்த திருடன்..!!

0 ரூபாய் தேசிப்பழத்திற்கு ஆசைப்பட்டு 3 இலட்சம் ரூபா பெறுமதியினான மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச்சென்ற சென்ற சம்பவம் வரமராட்சி வதிரி இருப்பு மதவடிப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.மேற்படி பகுதியில் உள்ள காணி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திருட்டுத்தனமாக தேசிபழங்களை பிடுங்கியுள்ளார்.

இது தொடர்பில் நெல்லியபடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்ற போது தேசிப்பழங்களை பிடுங்கியவர் தனது பெறுமதியான மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லியடி பொலிஸார் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தற்போது தேசிப்பழம் விலை கிலோ இருபது ரூபாய் தொடக்கம் முப்பது ரூபாய் வரை சந்தை நிலவரம் காணப்படும் நிலையில் அதனை பிடுங்க சென்றவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றமை பொலிஸாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like