அடர்ந்த காட்டுப் பகுதியில் இரவில் இடம்பெற்ற கோர சம்பவம் : பரிதாபமாக பலியான இளைஞன்!!

கொழும்பிலிருந்து கிண்ணியா மூதூர் நோக்கி பயணித்த வான், யானையுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஹபரணைக்கும், ஹதரஸ் கொட்டுவைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், சிறுமி உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹம்மட் நவீத் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

யாருமில்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வேகமாக சென்றதன் காரணமாக வீதியில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like