தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்!!

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

குஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார்.

நீண்ட நாட்களாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசையிருந்தும், குழந்தையில்லாததால் பூனாவில் உள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார்.

பின்னர் அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது தாயாரின் கருப்பை பொருத்தப்பட்டது.

தற்போது 20 மாத கர்ப்பிணியாக இருக்கும் மீனாட்சி குறித்து சிகிக்சையளித்த மருத்துவர் Shailesh Puntambekar கூறுகையில், 20 ஆண்டுகளாக எந்த குழந்தையும் பெறாத இவரது தாயின் கருப்பை பொருத்தப்பட்டுள்ளது. கருப்பை பொருத்துவது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல. இதன்மூலம் தொற்றுநோய்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
ஆசியாவிலே கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெறப்போகும் முதல் பெண் மீனாட்சி தான்.

உலகில் இதுவரை 9 பேர் இந்த சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் பேசுகையில், நான் பிறந்த கருப்பையிலே என்னுடைய குழந்தையையும் பெற்றுக்கொள்ள போகிறேன் என்பதை நினைத்தாலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.