துருக்கி தூதுவராலய நிதி அனுசரணையுடன் தீவக பகுதி 3000 பாடசாலை மாணவர்களுக்கு உதவித் திட்டம்…..

சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் துருக்கி தூதுவராலயத்தின் நிதி பங்களிப்புடன் தீவகப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட  3000 பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு வேலணை மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துங்கா ஒஸ்கா கலந்து கொள்ளவுள்ளதோடு சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரேஜினோல்ட் குரே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்..