கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் அட்டகாசம்..

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றின் சாரதியை, மக்கள் மத்தியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் தாக்கியுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

ஏ35 வீதியால் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வைத்து டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், அங்கு ஒன்று கூடிய மக்களினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like