கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தைப் பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு பசு மாட்டை இறைச்சியாக்கக் கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில்
அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருக வதை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா அண்ணல் நகர், புதுக் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28,18
வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.






