கருணாநிதியால் இலங்கைத் தமிழருக்கிடையில் வெடித்தது கலவரம்

கருணாநிதி குறித்து விவாதித்த இலங்கைத் தமிழருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஈச்சளவக்கை எனும் கிராமத்தில் உள்ள சில நபர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மரணமடைந்த நிலையில், அவருக்கு எதிராக ஈழத்துவாழ் தமிழர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் குறித்த விமர்சனம் சரியா? தவறா? என பல விவாதங்கள் எழுந்துள்ளன.

அப்போது விவாதங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.சிறிது நேரத்தின் பின் தாமாகவே சமாதானமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like