எனது சொல்லை பிரபாகரன் கேட்கவில்லை, அதனால் அவரை கொலை செய்தேன்! மஹிந்த

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அவரைக் கொல்லவேண்டிய நிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

தீர்வை காண்பதற்காக நாம் நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம். அதற்காக நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் எனக் கூறி பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்.

2006 இல் புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன்.

நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் அப்பாவிகளை கொல்லவேண்டாம். படையினரை தாக்கவேண்டாம். நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனக் கூறினேன்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று மகிந்த கூறினார்.

இதனையடுத்து கொலைகள் தற்கொலை தாக்குதல்கள் படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like